கண்டியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு திட்டம் : பாரத் அருள்சாமி அறிவிப்பு

Kandy Ceylon Workers Congress Sri Lanka
By Sathangani Aug 11, 2024 09:21 AM GMT
Report

கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், அபிவிருத்தி தேவைப்பாடுகளையும் நிச்சயம் நாம் நிறைவேற்றுவோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி (Bharath Arulsamy) தெரிவித்துள்ளார்.

இதேவேளை தற்போது நாம் கல்விக்கு முன்னுரிமை வழங்கிவருவதால் கண்டி மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களும் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 இ.தொ.காவின் ஏற்பாட்டில் கண்டி 'கரலிய' அரங்கத்தில் நேற்று (10) நடைபெற்ற தோட்ட தொழிற்சங்கங்களின் இளம் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏமாற்றுக்காரர்களின் தலைவரே ரணில்: விமர்சித்துள்ள தமிழ் எம்.பி

ஏமாற்றுக்காரர்களின் தலைவரே ரணில்: விமர்சித்துள்ள தமிழ் எம்.பி

ஜனாதிபதி நாட்டைக் கட்டியெழுப்பினார்

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நெருக்கடியான காலகட்டத்தில் சவாலை ஏற்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இளம் அரசியல் தலைவர்களுடன் இணைந்து ஜனாதிபதி இந்நாட்டை கட்டியெழுப்பியுள்ளார். எனவே, எத்தகைய சவால்களையும் வெற்றிகரமாக சந்திப்பதற்கு இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்.

கண்டியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு திட்டம் : பாரத் அருள்சாமி அறிவிப்பு | Plan To Improve Tamil Schools In Kandy Bharath

இ.தொ.காவின் முதல் மாநாடு கண்டி மாவட்டத்தில் நடைபெற்றிருந்தாலும், காலபோக்கில் வந்த சில அரசியல்வாதிகளால் கண்டி மண்ணில் எம்மால் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாமல்போனது. இந்நிலைமையை நாம் இன்று சீர்செய்துள்ளோம்.

கடந்த பொதுத்தேர்தலில் கண்டியில் களமிறங்கிய எனக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உட்பட கட்சி செயற்பாட்டாளர்கள் பக்க பலமாக இருந்தனர், இளைஞர்கள் உட்பட மக்களும் ஆதரவு வழங்கினர். அதனால்தான் முதல் தடவையிலேயே 25 ஆயிரம் வாக்குகளை வரை பெறமுடிந்தது.

அடுத்த முறை நாம் கண்டி மாவட்டத்தில் பிரதிநிதித்துவத்தை பெறுவோம்;. அதற்கு மக்கள் பேராதரவு வழங்குவார்கள். கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கான அபிவிருத்திகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்துள்ளோம். அவரும் இதுபற்றி கவனம் செலுத்திவருகின்றார்.

இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : உயர்வடையப் போகும் தங்கம் மற்றும் பெட்ரோலின் விலை

இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : உயர்வடையப் போகும் தங்கம் மற்றும் பெட்ரோலின் விலை

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு

அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் சுமூகத்தீர்வு கிட்டும் என நம்புகின்றோம். எதிர்வரும் 12 ஆம் திகதி பேச்சுவார்த்தை உள்ளது. இதன்போது இரு தரப்புகளும் இணக்கப்பாட்டுக்கு வந்து, இப்பிரச்சினை தீரும் என உறுதியாக நம்புகின்றோம்.

கண்டியில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு திட்டம் : பாரத் அருள்சாமி அறிவிப்பு | Plan To Improve Tamil Schools In Kandy Bharath

அத்துடன், தேர்தல் காலங்களில் மாத்திரம் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் பற்றி பேசுபவர்கள், தேர்தலின் பின்னர் மக்களுக்குரிய சேவைகளை உரிய வகையில் முன்னெடுப்பதில்லை, இவ்வாறான ஏமாற்று அரசியல்வாதிகளுக்கு மக்கள் தக்கபாடத்தை அடுத்த தேர்தலில் புகட்டுவார்கள்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் இக்கூட்டத்தை என்னால் வெற்றிகரமாக ஏற்பாடு செய்ய முடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.” என்றார்.

மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த இந்திய தூதுவர்

மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த இந்திய தூதுவர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016