நெடுந்தீவு உட்பட வடக்கில் மூன்று தீவுகளை தாரைவார்க்க திட்டம்

india north plan provide Vijith Vijayamuni Soysa three island
By Vanan Jan 01, 2022 12:38 PM GMT
Report

நெடுந்தீவு உட்பட வடக்கில் மூன்று தீவுகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான தீவிர முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா (Vijith Vijayamuni Soysa )தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தற்போது வடக்கில் மூன்று தீவுகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அவற்றில் நெடுந்தீவும் உள்ளடங்குகின்றது.

நான் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தபோது நாட்டில் கைவிடப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட குதிரைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். குறிப்பாக நெடுந்தீவில் மிகவும் உயரமாகக் காணப்பட்ட குதிரைகள், காலநிலை உள்ளடங்கலாக காலப்போக்கில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களால் உயரம் குறைந்தவையாக மாறிவிட்டன.

எனவே வனஜீவராசிகள் சட்டத்தின் ஊடாக அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டிருந்தன. அவ்வாறிருக்கையில் அந்தத் தீவை எவ்வாறு பிறிதொரு நாட்டிற்கு வழங்கமுடியும்? எனவே இவ்விடயத்தில் சூழலியலாளர்கள் தலையீடு செய்யவேண்டியது அவசியமாகும். அதேபோன்று நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்து, அதற்குப் பதிலாக மூன்று மாதகாலத்திற்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது. ஆனால் மூன்று மாதங்கள் முடிவடைந்த பின்னர் நாட்டிற்கு எரிபொருளும் கிடைக்காது.

நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய் குதங்களும் இந்தியாவிற்குச் சொந்தமாகி விடும். இதனால் நாட்டிற்கு கிடைக்கின்ற பயன் என்ன? மேலும் அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொண்டிருக்கும் ஒப்பந்தங்களாலும் பேணிவரும் தொடர்புகளாலும் சந்தேகமடைந்திருக்கும் சீனா, கடந்த 10 வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கென சீனத் தூதரகத்தின் கீழ் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் சீனா சிறிலங்காவுக்கு அவசியமான உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025