அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய விமானம்! பயணித்த அனைவரும் பலி
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் விமானி உட்பட 7 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
டென்னசி மாகாணத்தின் ரதர்போர்ட் நகரில் உள்ள விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது. இதன்போது விமானத்தில் விமானி உட்பட 7 பேர் இருந்தனர்.
புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பெர்சி பிரைஸ்ட் ஏரிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து விமானம் ஏரியில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானத்தில் இருந்த 7 பேரும் ஏரியில் மூழ்கியுள்ளனர்.
இந்த விபத்துக் குறித்து தகவல் கிடைத்ததும் ரதர்போர்ட் நகரைச் சேர்ந்த மீட்புக் குழு உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் இறங்கியது. பல மணி நேர தேடுதலின் பின் ஏரியில் இருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது. மற்ற 6 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
எனினும் அவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. அவர்களை தேடும் பணி தொடர்கிறது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.