நடுவானில் பற்றியெரிந்த அமெரிக்க விமானம்!! நால்வர் பலி
america
plane
crash
By Vanan
அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அட்லாண்டா நகரின், சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள, தெகால்ப் - பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், நடுவானில் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தகவல் அறிந்து 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்திற்கான காரணம் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில், இந்த விபத்துக் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தவுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி