கனடாவில் மாயமான விமானம் - தீவிர தேடுதலின் பின் மீட்பு
கனடாவின் கல்கரிக்கு மேற்கே உள்ள கனனாஸ்கிஸில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் ஒரு விமானம் வெள்ளிக்கிழமை இரவு கல்கரிக்கு அருகிலுள்ள ஸ்பிரிங்பேங்க் விமான நிலையத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் சால்மன் ஆர்ம் செல்லும் வழியில் புறப்பட்டது.
இந்த நிலையில் ஒன்ராறியோவின் ட்ரெண்டனில் உள்ள கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம், விமானத்துடனான தொடர்பு உள்ளுர் நேரப்படி 9.20pm மணியளவில் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தேடுதல் நடவடிக்கை

விமானம் தாமதமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு, வின்னிபெக்கில் உள்ள ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் (RCAF) படைப்பிரிவால் தேடுதல் நடத்தப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையடுத்து படைப்பிரிவு விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்தது, மேலும் ஆல்பர்ட்டா பார்க்ஸ் மவுண்டன் ரெஸ்க்யூவின் உதவியுடன் உயிர் பிழைத்தவர்களைத் தேடினர்.
இருப்பினும், விமானத்தில் இருந்த ஆறு பேரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.