வீதியில் நின்ற வாகனங்கள் மீது திடீரென விழுந்த விமானம் : அமெரிக்காவில் பரபரப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹிக்ஸ் விமான நிலையத்திற்கு அருகே, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
நேற்று(12) பிற்பகல் சிறிய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 18 சக்கர ட்ரக் மற்றும் பிற வாகனங்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
பல வாகனங்கள் சேதம்
இந்த விபத்தின் காரணமாக, ட்ரக் மற்றும் அருகிலிருந்த கார்கள் உட்பட பல வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.
அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை விரிவான விசாரணை
தீயணைப்பு படையினர் நடத்திய மீட்பு பணியில், தீயில் எரிந்த நிலையில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்தத் துயர விபத்து குறித்து அமெரிக்க விமான போக்குவரத்துத் துறை விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
