பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முதன்முறையாக 1700 சம்பளம்!
Sri Lanka Upcountry People
Matale
Money
By Shadhu Shanker
10 months ago
முதன்முறையாக(இன்று) எல்கடுவ பிளான்டேசன்ஸ் (plantaions) நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பளம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முயற்சியால் அரசாங்கத்தினால் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை 1700ரூபாய் உயர்த்த வேண்டும் என்ற வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு பெருந்தோட்ட நிறுவனங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்ததுடன் வழக்கும் தொடர்ந்தன.
இந்நிலையில் மாத்தளையிலுள்ள(Matale) எல்கடுவ plantaions நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் இன்று 1700ரூபா சம்பளம் பெறவுள்ளனர்.
முன்னதாக பெருந்தோட்ட ஊழியர்களுக்கு முதன்முதலாக 1000ரூபா சம்பளம் கொடுத்த நிறுவனமும் இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்