பெருந்தோட்ட மக்களின் கொடுப்பனவு அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்
Diwali
Sri Lanka Upcountry People
Sri Lanka
By Harrish
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரச பெருந்தோட்ட கம்பனிகளால் வருடாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு தொகை பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முந்தைய ஆண்டுகளில் பத்தாயிரம் ரூபாயாக இருந்த தொகை, 20,000 ரூபாயாக உயரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் குறைந்த சம்பளம்
உழைக்கும் தமிழ் மக்களின் குறைந்த சம்பளத்தினை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகைகான பொருட் கொள்வனவுக்காக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மக்கள் தமது உடமைகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு காவல்துறையினரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ மக்களின் வரலாற்றில் மறக்கவியலாத யாழ் இடப்பெயர்வு… 5 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்