பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் உறுதி : வெளியான அதிரடி அறிவிப்பு
தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில் வாக்கெடுப்பு மூலமாக 1700 ரூபாய் சம்பளம் வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இன்று (12) சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற
பேச்சுவார்த்தையில் இந்த இறுதி தீர்வு எடுக்கப்பட்டுள்ளது.
சம்பள விடயம் உயர் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட தவறுகளை திருத்தி அமைத்து 1700 ரூபாய் சம்பளம் உயர்வை பெற்றுத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) ஆகியோருக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) நன்றி தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் காங்கிரஸ்
அத்தோடு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளத்தை முன்மொழிந்தது போல அதனை மக்கள் கை பெற்றுக்கொடுக்கும் முழுப்பொறுப்பும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1700 ரூபாய் சம்பளம் கிடைக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் செந்தில் தொண்டமான் நன்றிகளை தெரிவித்துள்ளதுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமானும் (jeevan thondaman) தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத்தருவதாக
தெரிவித்தேன் அதனை பெற்றுக்கொடுத்தேன் அதேபோல் 1700 ரூபாய் சம்பளம்
பெற்றுத்தருவதாக தெரிவித்தேன் இதனையும் பெற்றுக்கொகொடுத்து விட்டேன் ஆகவேதான் மக்களிடம் வழங்கப்படும் வாக்குறிதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்
என்றும் இந்த 1700 ரூபாய் சம்பள வெற்றியினை மிகப்பெறிய வெற்றியாக
கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |