நலன்புரி உதவித்திட்ட பிரச்சினையை தீர்க்க நிதி வசூலிக்கும் அவலம்...!

Sri Lankan Tamils Jaffna Government Of Sri Lanka Sonnalum Kuttram
By Pakirathan Jun 28, 2023 01:19 PM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வறிய மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கான சமூக நலன்புரி உதவித்திட்ட நடைமுறைகளில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பாரபட்சங்கள் காணப்படுவதாக மக்கள் மத்தியில் பாரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது இலங்கையின் பல இடங்களில், அதுவும் குறிப்பாக தமிழர் தாயகங்களில் மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது.

இது தொடர்பில் குற்றம் சாட்டும் மக்கள், குறித்த பட்டியலில் தமது பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் ஆட்சேபனை செய்வதற்கான விண்ணப்பத்தை வழங்குவதில் கூட நிதி வசூலிப்பு மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இவ்வாறான தவறுகளை நிவர்த்தி செய்வதுடன் குறித்த நிதி வசூலிப்பை உடன் நிறுத்தவதற்கான நடவடிக்கையையும் யாழ் மாவட்ட அரச அதிபர் எடுக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நிதி வசூலிப்பு

நலன்புரி உதவித்திட்ட பிரச்சினையை தீர்க்க நிதி வசூலிக்கும் அவலம்...! | Plight Of Receiving Bribes Is Happening In Jaffna

இந்த நிதி வசூலிப்பு விடயத்தினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், இது தொடர்பான முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

"சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய குறித்த தரவுகள் பிரதேச செயலகங்களில் அண்மைக்காலத்தில் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டமையால் மக்களுடனான தொடர்பும், அவர்களது குடும்ப நிலைமை தொடர்பான விபரங்களும் அவர்களுக்கு போதியளவில் இருந்திருக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் உண்மையான நிலைப்பாடும், தேவையானவர்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை தற்போது சமுர்த்தி பெறுகின்ற வறிய குடும்பங்கள் பலரது பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சமூக நலன்புரி நன்மைகள் சபையின் பயானாளி தெரிவுக்கு குறித்த திட்டத்தில் உள்வாங்கப்படாத மக்களை மேன்முறையீடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

மக்கள் கோரிக்கை 

நலன்புரி உதவித்திட்ட பிரச்சினையை தீர்க்க நிதி வசூலிக்கும் அவலம்...! | Plight Of Receiving Bribes Is Happening In Jaffna

இதனால் தற்போது ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் முன்றலிலும் நூற்றுக்கணக்கிலான மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து ஒன்லைன் (நிகழ்நிலை) முறை ஊடாக ஆட்சேபனைகளை விண்ணப்பிக்குமாறும், அதனை பிரதேச செயலகங்கள் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த விண்ணப்பங்களை ஏற்பதில் பிரதேச செயலகங்களில் உள்ள வளப் பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதால் தனியார் முகவர்கள் நிலையங்கள் இதனை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டிவருவதுடன், அதற்காக 300 ரூபா முதல் அதிக நிதி அறவீடு செய்யப்பட்டு வருவதாகவும், குறித்த விண்ணப்பத்தை விண்ணப்பிப்பதற்கே தாம் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும் வறிய மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே வறிய மக்களுக்கான குறித்த திட்டத்தை மிக நேர்த்தியான முறையில் தேவையான பயனாளிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யும் வகையிலும் இவ்வாறான நிதி வசூலிப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் யாழ் மாவட்ட செயலகம் மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது இவ்வாறான தவறான அல்லது மக்களின் தேவை கருதியதான தரவுகளை திரட்டும் போது அதனை துல்லியமாக, குறைபாடுகள் மற்றும் தவறுகள் ஏற்படாதிருப்பதற்கு அரச அதிகாரிகள் அதிக அக்கறை காட்டவேண்டும்." என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025