பிரதமர் மஹிந்தவுக்கு புகழாரம்
mahinda
war
wish
succes
By Vanan
30 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டு மக்களை அச்சத்திற்குட்படுத்தி, நாட்டை ஆட்டிப்படைத்த யுத்த அச்சத்தை இல்லாதொழித்தவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே என குகுல்பனே சுதஸ்ஸி தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்ற 213ஆவது தர்ம உபதேச நிகழ்வில், தர்ம உபதேசம் நிகழ்த்தும் போதே இவ்வாறு கூறினார்.
இதன்போது, பிரதமர் இந்த நாட்டிற்காகவும் புத்த சாசனத்திற்காகவும் ஆற்றிய சேவைகள் மகத்தானவை.
யுத்த அச்சத்தை இல்லாதொழித்து, அனைவரும் நல்லிணக்கத்துடன், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியமை எப்போதும் பாராட்டிற்குரியது என குகுல்பனே சுதஸ்ஸி தேரர் மேலும் புகழாரம் சூடியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி