முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Prime Minister
birthday
Modi
Chief Minister Stalin
By Vanan
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 69 ஆவது பிறந்தநாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்தும் பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமரின் ஒத்துழைப்புடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பேன் என தெரிவித்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
