பிரதமர் அலுவலக வாகன விற்பனை முறைகேடு : சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மருத்துவருக்கு நேர்ந்த கதி
பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனையில் நடைபெற்ற முறைகேடு தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மருத்துவ நிபுணருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தின் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனங்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
வாகன விற்பனை முறைகேடு - சமுக வலைத்தளத்தில் பதிவு
அதன்போது வாகனங்களின் உரிய பெறுமதியை விட குறைவான விலையில் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவித்து விசேட மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்க சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டிருந்தார்.
அத்துடன் அவரது நெருங்கிய நண்பரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சம்பவம் தொடர்பில் கடிதமொன்றை எழுதி, அதனையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஜனாதிபதி அநுரவிற்கும் கடிதம்
குறித்த கடிதத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பாக தற்போது மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்கவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்கள காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்கவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
காமினி ரணசிங்கவின் சமூக வலைத்தள பதிவிற்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகள் மேற்கொண்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



