ரணிலின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே பதற்ற நிலை! காவல்துறை கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் (படங்கள்)
புதிய இணைப்பு
கொழும்பு 7இல் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகை தாக்குதல் மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
அரச தலைவரது இல்லம், செயலகம் என்பவற்றை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, பிரதமரை இராஜினாமா செய்யக்கோரி பிரதமரின் இல்லம் அருகே பொதுமக்கள் திரண்டுள்ளனர்.
இதனைத் தடுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை தாக்குதல் மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ஏற்கனவே ஆர்ப்பாட்டக்காரர்கள், அரச தலைவரது மாளிகை, அரச தலைவர் செயலகம் ஆகியவற்றிலும் உட்பிரவேசித்தனர்.
அரச தலைவர் மாயம்
எனினும் அவர்கள் அரச தலைவர் மாளிகைக்குள் சென்றபோது, அரச தலைவர் அங்கிருக்கவில்லை.
அவர் நேற்று இரவே அங்கிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
