இலங்கையில் சிறுவர் சினிமாவிற்கான கதவுகளை திறக்க பிரதமர் கோரிக்கை
குழந்தைகளின் திருப்திக்கான மாற்று வழிமுறையாக சிறுவர் சினிமாவிற்கான பாதையினை திறக்க வேண்டுமென பிரதமர் தினேஸ் குணவர்த்தன வலியுறுத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் இன்று(01) இடம்பெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
சிறுவர் உரிமைகள்
“நம் நாட்டில் குழந்தைகள் சினிமா இல்லை. அதைக் உருவாக்க வேண்டும். பெரிய திரைப்பட அரங்குகள் தேவையில்லை. இதுபோன்ற திட்டத்திற்கு பிரதமர் அலுவலகம் மற்றும் மாகாண சபைகள் இணைந்து ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளோம்.
அவ்வாறு செய்வதன் மூலம் திரையரங்குகளை திறக்க முடியும். குழந்தைகளின் திருப்திக்கான மற்றொரு வழியின் கதவாக அது அமையும். குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அரசு பல திட்டங்களை முன்வைத்து அவற்றை செயல்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான கூடுதல் பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்குவது அவசியம்.
சமூகத்தில் குழந்தைகளின் உரிமைகளை அனுபவிப்பதற்கும், எதிர்கால சமுதாயத்தின் குடிமக்களாக அவர்களை மாற்றுவதற்கும் எந்த தடைகளும் இருக்க முடியாது.
இதுபோன்ற சட்ட தடைகள் இருந்தால், அவை அகற்றப்பட வேண்டும். அந்த வகையில், அரசாங்கமாக நாங்கள் தேவையான முடிவுகளை எடுக்கவும், செயல்படுத்தவும் தயங்கக்கூடாது.
தனியார் துறை அவர்களின் வருமானத்தில் இருந்து குழந்தைகளின் நலனுக்காக கணிசமான பங்களிப்பை வழங்குகிறது. அதற்கு நான் நன்றி கூறுகிறேன்.
சுமார் ஐந்து மில்லியன் குழந்தைகளின் சார்பாக நாங்கள் முடிவுகளை எடுக்க வேண்டும். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்.
ஆனால், தேர்வில் தேர்ச்சி மற்றும் தோல்வி அடையும் குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம்.” என்றார்.
