ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியுடன் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ திடீர் உரையாடல்!
ஆப்கானிஸ்தான் தலிபான்களின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் உரையாடியுள்ளார்.
இந்த தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானில் 2001 முதல் 2014 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்துள்ளார்.
அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியிடம் பேசிய பிரதமர், நாட்டின் முன்னேற்றங்கள் குறித்து விசாரித்ததுடன், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஸ்ரீலங்கா தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்குப் பிறகு தலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ள இந்த சூழ்நிலையில், பிரதமருக்கும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான இந்த பேச்சுவார்த்தை அரசியல் மட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
Spoke to the Former President of #Afghanistan @KarzaiH to inquire about the ongoing developments unfolding in his country and reaffirmed #SriLanka’s continued support to the People of Afghanistan. pic.twitter.com/nXnYsQGXS5
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) August 18, 2021