மகிந்த, பசில் மற்றும் நாமல் கடும் மந்திராலோசனை
எதிர்வரும் புதன்கிழமை மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியவுடன், பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இடைக்கால அரசாங்கங்களிலோ அல்லது வேறு பெயரில் அமைக்கப்படும் அரசாங்கங்களிலோ அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில்லை எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் கடந்த சில நாட்களாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த தீர்மானத்திற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், எதிர்க்கட்சியில் அமருவதே இந்த வேளையில் சிறந்த விடயம் என அவர்களில் பலர் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.
அதன்படி புதன்கிழமை ஆளும் கட்சி எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாக தெரியவருகிறது.
