மொட்டுவின் வேட்பாளரின் சட்டவிரோத செயற்பாடு -கையும் களவுமாக பிடித்தது காவல்துறை
Sri Lanka Police
Sri Lanka Podujana Peramuna
By Jaso
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுன சார்பில் வெலிக்கந்த பிரதேச சபைக்கு போட்டியிடவிருந்த ஒருவர் 15 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கொண்டு செல்லும்போது கைது செய்யப்பட்டதாக வெலிக்கந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர் வெலிக்கந்த சூரியவெவ கிராமத்தில் வசிக்கும் 33 வயதுடையவர் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கசிப்புடன் கைது

அவரது மனைவியும் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுன சார்பில் வெலிக்கந்த உள்ளூராட்சி சபைக்கு வேட்பாளராக போட்டியிட இருந்ததாகவும் காவல்துறையினர்தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் சூரியவெவ பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரித்து விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற போது 15 லீற்றர் மதுபானத்துடன் அவரை கைது செய்ததாக கொவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்