ரணிலுக்கு பொதுஜன பெரமுன வழங்கவுள்ள தேசிய பட்டியல் ஆசனங்கள்

SLPP Ranil Wickremesinghe Sagara Kariyawasam
By Sumithiran May 13, 2022 11:30 PM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் பிரதிநிதித்துவம் தேவையென்றால் அவருக்கு பல தேசியப்பட்டியல் ஆசனங்களை வழங்குவதில் பிரச்சினை இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் முதிர்ந்த அரசியல்வாதியாக இருந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை தேடினால் தமது கட்சி அதற்கு ஆதரவளிக்கும் எனவும் இத்தருணத்தில் கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் நாட்டை பலப்படுத்த இணங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தாம் விரும்பும் கட்சியை வளர்ப்பதை விட நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு கட்சி முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்காலத்தில்சுயாதீனமாக நாடாளுமன்றத்தில் செயற்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டத்திற்கு புதிய பிரதமர் ஆதரவளிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026