மகிந்தவே தலைவர் -மாற்று வழி இல்லை -மொட்டு அறிவிப்பு
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Sagara Kariyawasam
By Sumithiran
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக தற்போதைய தலைவர் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச செயற்படுவதாகவும் மஹிந்த ராஜபக்சவிற்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இன்று (17) தெரிவித்தார்.
அக்கட்சியின் நித்திய தலைவர் மகிந்த ராஜபக்ச என்று தெரிவித்த காரியவசம்,சுதந்திரத்திற்கு பிறகு இலங்கையை மிகவும் அபிவிருத்தியடையவைத்த, அதிக மக்கள் மதிப்பைப் பெற்ற, நாட்டிற்கு அதிக சேவை செய்த தலைவர் மஹிந்த ராஜபக்ச என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, தலைமைத்துவ மாற்றத்தை அர்த்தப்படுத்தாமல் புதிய செயற்பாட்டையே ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டதாக காரியவசம் மேலும் குறிப்பிட்டார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி