யாழில் வளர்ப்பு நாயை கட்டுப்பாடின்றி வீதியில் விட்டவருக்கு நீதிமன்றின் உத்தரவு
யாழில் தனது வளர்ப்பு நாயினை பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் விட்ட உரிமையாளருக்கு நீதிமன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (30-01-2026) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட நகர்ப்புறத்தில் வசிக்கும் வளர்ப்பு நாயின் உரிமையாளரே இவ்வாறு நீதிமன்றத்தினால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
வளர்ப்பு நாய்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குடியிருப்பாளர் தனது வளர்ப்பு நாயினைத் தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் விட்டிருந்தமையால் பாதசாரிகளிற்கும் பாடசாலை மாணவர்களிற்கும் ஆபத்து ஏற்படுவதாகப் பருத்தித்துறை நகரசபையிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
இது தொடர்பாகப் பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த வழக்கானது நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாயின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இதையடுத்து, நடைபெற்ற விசாரணையின் பின் கடுமையான எச்சரிக்கையுடன் உரிமையாளர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்