யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
யாழில் (Jaffna) சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவங்கள் மற்றும் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தரவு நீதிமன்றத்தினால் நேற்று (22) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு 40000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவு நேற்று (22) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தில் பருத்தித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, தனிநபர் சுகாதாரம் பேணாமை, வெற்றிலை மென்ற வண்ணம் உணவினை கையாண்டமை தொடர்பாக முகாமையாளர் மற்றும் உணவு கையாளுபவரிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், 40000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை நகரசபை
இதையடுத்து, வல்வெட்டித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு 25000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) பிறப்பித்துள்ளது.
மேற்படி உணவகத்தில் வல்வெட்டித்துறை நகரசபையின் பொது சுகாதார பரிசோதகரால் உடல்நலத்தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் ஊழியர்களை உணவகத்தில் அனுமதித்தமை, உணவகத்தில் கடமை புரியும் ஊழியர்கள் தனிநபர் சுகாதாரம் பேணாமை, இலையான் பெருக இடமளித்தமை, குடிப்பதற்கும் சுத்திகரிப்பிற்கும் பயன்படும் நீரானது குடிக்கத்தக்கது என உறுதி செய்ய தவறியமை மற்றும் உணவகத்தினை வதிவிடமாக பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளிற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில், 25000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருத்தித்துறை நகர்ப்புறத்தில் அமைந்துள்ள மீன்சந்தையில் மீன்வியாபாரம் செய்யும் போது வெற்றிலை மென்று பொதுவிடத்தில் எச்சில் உமிழ்ந்தவருக்கு 5000 தண்டப்பணமும் அறவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 8 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்