பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை - 55 பேர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
கைது
மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்போது 9 கிராம் 980 மில்லி கிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் சோதனைகள்
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கி இந்த போதைப்பொருள் சோதனைகள் தொடரும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறையினர் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்