காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran Apr 10, 2024 07:26 PM GMT
Report

மதவாச்சி காவற்துறையின் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட ஆறு உத்தியோகத்தர்களால் மோசமாக தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் படுகாயமடைந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதவாச்சி துலாவெல்லிய பகுதியைச் சேர்ந்த திலிஷா சங்கீத் என்ற 23 வயதுடைய இளைஞனே காயமடைந்தவராவார்.

இந்த இளைஞனின் தந்தையும் காவல்துறை சார்ஜன்ட் ஆவார். கடந்த 7ம் திகதி இந்த தாக்குதல் நடந்தது.

ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

ஹமாஸ் தலைவரின் மூன்று மகன்கள் இஸ்ரேல் விமான தாக்குதலில் பலி

விசேட விசாரணைகள் ஆரம்பம்

சம்பவம் தொடர்பில் கெபிதிகொல்லாவ சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மங்கள சமன் விக்கிரமநாயக்கவின் ஆலோசனையின் பேரில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன் | Police Beaten Youth Who Was Seriously Injured

இச்சம்பவம் தொடர்பில் மதவாச்சி காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை உள்ள பகுதி எது தெரியுமா...!

கனடாவில் உணவுப் பாதுகாப்பின்மை பிரச்சினை உள்ள பகுதி எது தெரியுமா...!

தாயின் குற்றச்சாட்டு

இதேவேளை மதவாச்சி காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் காரணமாகவே தனது மகனின் விதைப்பையை சத்திரசிகிச்சை மூலம் அகற்ற நேரிட்டதாக அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன் | Police Beaten Youth Who Was Seriously Injured

இளைஞன் தாக்கப்படவில்லை என்றும், அவரைக் கைது செய்யச் சென்றபோது அவர் ஆக்ரோஷமாக செயல்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

பாரவூர்தியின் பின்னால் துரத்திச் சென்ற மதவாச்சி காவல்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் பாரவூர்தியை நிறுத்தி தனது மகனையும் அவரது நண்பரையும் தாக்கியதாக இளைஞனின் தாய் கூறுகிறார்.

பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய் : பின்னர் இடம்பெற்ற துயரம்

பாம்பைக் கடித்துக் கொன்று குழந்தைகளை காப்பாற்றிய நாய் : பின்னர் இடம்பெற்ற துயரம்

தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காவல்துறையினர் தாக்குதல்

குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று தன்னையும் தனது நண்பரையும் கடுமையாக தாக்கியதாக அவர் கூறுகிறார்.

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன் | Police Beaten Youth Who Was Seriously Injured

காவல்துறை தெரிவிக்கும் காரணங்கள்

இளைஞர்கள் இருவர் பயணித்த பாரவூர்தியை நிறுத்துமாறு கட்டளையிட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றதால் துரத்திச் சென்று கைது செய்ய நேரிட்டதாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையின் மோசமான தாக்குதல் : உடல் உறுப்பை இழந்தார் இளைஞன் | Police Beaten Youth Who Was Seriously Injured

அப்போது அவர்களிடம் சட்டவிரோத மதுபானம் இருந்ததாகவும், வாகனத்தில் இருந்து அதனை வெளியே வீசியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ள பொதுமன்னிப்பு !

சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ள பொதுமன்னிப்பு !

இச்சம்பவத்தின் போது குறித்த இளைஞர் குடிபோதையில் இருந்ததாகவும் அவரிடம் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த இளைஞனின் இடது விதை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.   


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025