குற்றவாளிகள் தலைமறைவு - மக்களை துரத்தும் காவல்துறை
கடந்த 9ஆம் திகதி அமைதியான முறையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முக்கிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (15) காலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 100 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, மற்றவர்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னி ஆராச்சி மற்றும் அலரிமாளிகையில் குற்றத்தை நடத்திய அரசியல்வாதிகள் மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரை ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும், குறித்த அழைப்பாணையை குற்றவாளிகளுக்கு வழங்க காவல்துறையால் முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
