பொதுவெளியில் சர்ச்சைக்குரிய கைது: காவல்துறை அளித்துள்ள விளக்கம்
குருநாகல் பிரதேசத்தில் போதைப்பொருள் சந்தேகநபர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிரச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
பொதுவெளியில் இரண்டு காவல்துறையினர் குறித்த சந்தேகநபரை பலவந்தமாக கைது செய்யும் காணொளி வௌியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் பலத்தை பயன்படுத்துவதை
எனினும் குருநாகலில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யும் போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் பலத்தை பயன்படுத்துவதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருவது தொடர்பான கவலைகளை காவல்துறையினர் நிவர்த்தி செய்துள்ளனர்.
டிசம்பர் 26 ஆம் திகதி குருநாகல் டோரடியாவ பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெளிவுபடுத்தினார்.
போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் திருட்டுகள் என சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் இரண்டு காவல் உத்தியோகத்தர்களும் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அவர் கூறினார்.
காணொளியில் உள்ள நபர்
"காணொளியில் உள்ள நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர், போதைப்பொருள் விற்பனை மற்றும் திருட்டுகளில் ஈடுபட்டு தினசரி ஊதியம் பெறுகிறார். கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரின் வசம் 2 கிராம் ஹெரோயின் இருந்தது.
சந்தேக நபரைக் கட்டுப்படுத்த முயன்ற அதிகாரிகள், அவரைத் தாக்க முற்படவில்லை” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். கைது செய்யப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |