ஹெரோயினுடன் சிக்கிய காவல்துறை உத்தியோகத்தர்
காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் இன்று ( 30) 400 கிராம் ஹெரோயினுடன் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடப்புவ காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.
மற்றுமொரு நபரும் கைது
சந்தேக நபருடன் இருந்த பேலியகொடைப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடமிருந்து சுமார் 110 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
கடவத்தை எல்தெனியப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வருடம் இடமாற்றம்
குறித்த காவல்துறை அதிகாரி கொழும்பு குற்றப்பிரிவில் சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றி இந்த ஆண்டு உடப்புவ காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த போதைப்பொருள் டுபாயில் தலைமறைவாக உள்ள ரஸல் ஸ்மித் என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
