புலனாய்வுத் தகவலால் பரபரப்பாகும் சிறிலங்கா - நாடு முழுவதும் திடீர் பாதுகாப்பு..!
கொழும்பு பல்கலைக்கழகத்திற்குள் சுமார் 750 பேர் கொண்ட குழுவொன்று கலகம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமையவே கொழும்பின் பல பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அந்தக் குழுவினரின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்
இதற்காக காவல்துறை, காவல்துறை விசேட அதிரடிப்படை, இராணுவம் மற்றும் காவல்துறை கலகத்தடுப்புக் குழுக்கள் குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டின் ஏனைய பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெறும் இது தொடர்பான தகவல்களின் அடிப்படையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
நாடுமுழுவதும் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை - காவல்துறையினர் குவிப்பு