கிளிநொச்சியில் பாரவூர்தி மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Independent Writer
கிளிநொச்சியில் காவல்துறையின் கட்டளையை மீறிச் சென்ற பாரவூர்தி ஒன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று (01) அதிகாலை 3 மணியளவில் கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியின் சில்லுகள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாரவூர்தியின் எரிபொருள் தாங்கி மற்றும் டயர் என்பன பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் சந்தேகநபரான பாரவூர்தியின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை…
3 நாட்கள் முன்
பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவு நாளும் ஈழ இனப்படுகொலையும்
4 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்