இவர்களைத் தெரியுமா..! பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
பொரலஸ்கமுவ, ஆம்பில்லவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பகலில் நுழைந்து வீட்டில் இருந்த வெளிநாட்டு நாணயம் மற்றும் சொத்துக்களை திருடிச் சென்ற சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு காவல்துறை தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
கடந்த 12ஆம் திகதி பகலில் இந்த வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர்கள் இருவரும் பணிப் பெண்ணை அச்சுறத்தி 10,707,800 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தகவல் தெரிந்தால்
பாதுகாப்பு கமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட மேற்படி புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொரலஸ்கமுவ நிலைய பொறுப்பதிகாரி 071-8591646 மற்றும் பொரலஸ்கமுவ காவல் நிலையத்தின் 011-2150769 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தலைமையகம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.



