கொழும்பில் சிக்கிய கைத்துப்பாக்கி : காவல்துறையினர் தீவிர விசாரணை
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Jaso
கொழும்பு(colombo), முகத்துவாரம் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கைத்துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்தக் கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதனையடுத்துக் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி மேலதிக விசாரணைகளுக்காக முகத்துவாரம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |