வீட்டின் வேலியினை முற்றாக எரித்த விஷமிகள் - புங்குடுதீவில் சம்பவம்
Sri Lanka Police
Jaffna
By pavan
புங்குடுதீவு J/26 கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மணியாரம் தோட்டம் வீதீயில் அமைந்துள்ள செல்லா என்பவரின் வீட்டின் வேலியினை விஷமிகள் சிலர் தீயிட்டு எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவமானது நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அயலவர்களுக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாகவே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை

இது குறித்து புங்குடுதீவு குறிகட்டுவான் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியதுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.