தனியார் வீடொன்றுக்குள் பாய்ந்த காவல்துறையினரின் வாகனம்: மயிரிழையில் தப்பிய மாணவர்கள்
வவுனியா (Vavuniya) - புளியங்குளம் காவல்துறை பொறுப்பதிகாரியின் வாகனமொன்று தனியார் வீடொன்றுக்குள் புகுந்து விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து இன்று (04) வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அரச ஊத்தியோகத்தர்களாக கடமையாற்றும் குடும்பத்துக்கு சொந்தமான வீட்டையும், அங்கிருந்த சொத்துக்களுக்கும் இந்த விபத்தினால் சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரிடம் பெரும் வாக்குவாதம்
மது போதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இதனால் காவல்துறையினரிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்தப் பிரதேசத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, வாகனத்தில் பயணித்த காவல்துறையினரை நெடுங்கணி காவல்துறையினர் இரகசியமாக காப்பாற்றி வெளியில் கொண்டு சென்றுள்ளதாகவும் வாகனத்தில் நான்கு வகையான நபர்கள் பயணித்து உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
20 லட்சம் பெறுமதி ஆன பொருட்கள்
வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர்
சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு என்பவற்றை
சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த
சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.
சுமார் 20 லட்சம் பெறுமதி ஆன பொருட்களே இவ்வாறு மேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நட்ட ஈடு
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் நெடுங்கணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தடயவியல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு குறித்த விபத்து தொடர்பான தடையங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் சேதமடைந்த மோட்டார் சைக்கிள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள், வீட்டின் முன் வேலி தூண்கள், தகரங்கள் என்பனவற்றுக்கு நட்ட ஈடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |