கால்நடை திருட்டு காவல்துறை அதிகாரி கைது
பொலனறுவை மன்னம்பிட்டியில் திருடியதாக கூறப்படும் கால்நடையொன்றை தோட்டத்தில் கட்டி வைத்திருந்த நிலையில் காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் கந்தளாய் தலைமை யக காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கடந்த 20ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக வெலிகந்த காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருடப்பட்ட கால்நடை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வெலிகந்த காவல் நிலையத்தில் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த காவல்துறை சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவர்.
காவல்துறை சார்ஜனின் சகோதரர் ஒப்படைத்த கால்நடை
சந்தேக நபரான காவல்துறை சார்ஜனின் சகோதரர் அவருடைய லொறியில் கால்நடையை ஏற்றிச் சென்று சார்ஜனிடம் ஒப்படைத்து சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ள தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த கால்நடை சார்ஜனிடம்
ஒப்படைத்ததாக கூறப்படும் அவரின்
சகோதரரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். அவருக்குரிய மேலும் இரு கால்நடைகள்
காணாமல் போயுள்ளதாகவும் உரிமையாளர் மன்னம்பிட்டிய காவல்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்
ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்த
னர்.
