கட்டுநாயக்காவில் சற்று முன்னர் துப்பாக்கிசூடு : காவல்துறை அதிகாரி படுகாயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Gun Shooting
By Jaso
இன்று பிற்பகல் (15) கட்டுநாயக்க மொட்டாவ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இரண்டு காவல்துறை அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைத் துரத்திச் சென்று, அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.
காவல்துறை அதிகாரியிடமிருந்து துப்பாக்கியை பறித்து தாக்குதல்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது, காவல்துறை அதிகாரிகளில் ஒருவர், சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துவரச் சென்றார்.

இதற்கிடையில், சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரியிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து, அவரைச் சுட்டுவிட்டு மற்றொரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்