புரட்சியில் ஈடுபட்டவர்களை மகிழ்விக்க பியானோ வாசித்த காவல்துறை அதிகாரி - எடுக்கப்பட்ட நடவடிக்கை
கடந்த வருடம் மே மாதம் கொழும்பில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின்போது, புரட்சியாளர்கள் அதிபர் மாளிகைக்குள் சென்றிருந்தனர்.
இதன்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் அதிபர் மாளிகையில் பியானோ வாசித்துக்காட்டிய காவல்துறை அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் மாளிகை புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அதன் பாதுகாப்பிற்காக தயாரத்ன என்ற காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்.
பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி
எனினும் அவர் அங்கு கடமையில் ஈடுபடாது அதிபர் மாளிகையில் இருந்த பியானோ மூலம் பாடல்களை வாசித்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்துள்ளார்.

இவரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணையை அடுத்து காவல்துறையின் ஒழுக்கத்தை மீறியமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பியானோ வாசித்துக் கொண்டிருந்தார்
இதேவேளை குறித்த காவல்துறை அதிகாரி அதிபர் மாளிகை கட்டடத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சேதப்படுத்தும்போது பியானோ வாசித்துக் கொண்டிருந்தார் என பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
