காவல்துறை அதிகாரியின் மனைவியின் கைகள் கட்டப்பட்டு கொள்ளை - மூன்று பேர் கைது!
காவல்துறை பொறுப்பதிகாரியின் வீட்டில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொள்ளைச் சம்பவம் வெலிபன்ன, பொண்டுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொள்ளை
மூவர் அடங்கிய குழு ஒன்று வடக்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றும் பொறுப்பதிகாரியின் வீட்டினுள் நுழைந்து அவரது மனைவியின் கைகளை கட்டிவைத்து கொள்ளையிட்டுள்ளனர்.
குறித்த ஆயுதம் தாங்கிய குழுவினர் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகள் போன்றவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அநுராதபுரம், குடா அருக்கொட மற்றும் அலுபோமுல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
