யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் வாங்கிய காவல்துறை உயர் அதிகாரியின் மகன் : விசாரணை ஆரம்பம்
மதுபோதையில் வாகனம் செலுத்திய நபரின் வழக்கினை முடித்து தருவதாக தெரிவித்து ரூபாய் 20 ஆயிரம் இலஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரியின் மகன் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்(jaffna) மது போதையில் முச்சக்கர வண்டியை செலுத்திய நபர் ஒருவரை யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்தனர். குறித்த நபரை வெளியில் விடுவதாக கூறி காவல்துறை உயர் அதிகாரியின் மகன் 20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார்.
நீதிமன்றின் உத்தரவு
இந்நிலையில் குறித்த நபரை காவல்துறையினர் நீதிமன்றில் முற்படுத்திய வேளை நீதிமன்று அந்நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , ஒரு மாத காலத்திற்கு சாரதி அனுமதி பத்திரத்தை இடை நிறுத்தியுள்ளது.
யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையிடம் முறையீடு
இதனையடுத்து காவல்துறை அதிகாரியின் மகனுக்கு பணம் கொடுத்த நபர் , யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையிடம் முறையிட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
