யாழில் காவல்துறை உத்தியோகத்தரின் மகன் லஞ்சம் வாங்கிய சம்பவம்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணம்(Jaffna) தலைமை காவல் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். தலைமைப் காவல் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியின் மகன் ஒருவர் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த காவல்துறை அதிகாரியின் மகன் வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாவினை பொதுமகன் ஒருவரிடம் இலஞ்சமாக பெற்றுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இதையடுத்து, இலஞ்சம் பெற்றமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்தவகையில், சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த வழக்கானது இன்றையதினம்(10) காவல்துறையினரால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதன்படி, இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் குறித்த சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதிக்குள் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 2 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
6 நாட்கள் முன்