மட்டக்களப்பில் பெண்களுடன் அநாகரிகமாக நடந்த காவல்துறை அதிகாரி (படங்கள்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற எரிபொருள் வண்டியை மறித்து மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
இதன்போது சிறு தொகை மக்கள் ஒன்றுகூடியதன் காரணமாக குறித்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்த இடத்துக்கு வரவழைக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தலைமை காவல் பொறுப்பதிகாரி பெண்கள் மீது அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட காட்சி பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
காவல்துறையினர் தங்களது கடமைகளை செய்யும்போது பெண்கள் மீது கை வைக்க முடியாது என்பது குறித்த காவல் பொறுப்பு அதிகாரிக்கு தெரியாமல் போனது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களின் போது பெண் காவல்உத்தியோகத்தர்களை கொண்டு வந்து குறித்த போராட்டக்காரர்களை அடக்க முட்பட்டிருக்கலாம்.
குறித்த உயர் அதிகாரி அந்தப் பெண்களை அநாகரிகமாக பிடித்து தள்ளும் காட்சி சமுக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சினை ஒன்று வருகின்றபோது பெண் காவல் உத்தியோகத்தர்களை வரவழைக்காமல் இவ்வாறு நடந்து கொண்ட விதம் ஒரு அருவருக்கத்தக்க செயலாகும்.
குறித்த காவல் உயர் அதிகாரியின் செயலுக்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரவலாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

