பெட்ரோல் இருக்கு ஆனால் கொடுக்கமாட்டோம்! ஊழியர் பகிரங்கம்: முரண்பட்ட இளைஞன் (காணொளி)
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள லங்கா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக சென்ற மக்களுக்கு எரிபொருள் உள்ளது ஆனால் வழங்க முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் கூறியுள்ளார்.
இதனையடுத்து அங்கு இருந்த இளைஞர்களில் ஒருவர் எதற்காக வழங்க முடியாது என்று விசாரிக்க, எம்மிடம் 95 ரக பெட்ரோல் மாத்திரமே இருப்பதாகவும் அதை உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கோபமடைந்த இளைஞர் வாக்குவாதம்
இதனால் கோபமடைந்த இளைஞர் 95 ரக பெட்ரோலை ஏன் உந்துருளிகளுக்கு வழங்க கூடாது, அரச சட்டம் அவ்வாறு உள்ளதா என குறித்த ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பகுதி பாரபரப்பாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் 95 ரக பெட்ரோலை உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு வழங்க வேண்டாம் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.