வழங்கப்படும் சம்பளம் போதுமானதல்ல - காவல்துறை மா அதிபர் சாடல்
காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
காவல்துறை குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என்பதை நாம் அறிந்துள்ளோம்.
அதிகாரிகளுக்கு பற்றாக்குறை
இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்திய நிலையில், அது குறித்து ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

அந்த குழுவுக்கு தேவையான அளவு எமது யோசனைகளை நாம் முன்வைத்துள்ளோம். இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம் காவல் துறையில் 32000 காவல்துறை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை உள்ளது. இந்த வருடத்தில் 2500 பேரும், அடுத்த வருடத்தில் 2700 பேரும் ஓய்வு பெறவுள்ளனர். எனவே அவர்களை யாரும் தடுக்க முடியாது.
இந்நிலையில் காவல்துறை துறையில் புதிதாக 10000 பேரை சேவையில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |