யாழில் டிப்பர் வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு : ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Jaffna
Law and Order
By Shalini Balachandran
யாழில் (Jaffna) டிப்பர் வாகனமொன்றின் மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (02) யாழ் - பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை - பொன்னாலை வீதி கடற்கரை வீதியில் இன்று (02) காலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பரை காவல்துறையினர் வழிமறித்துள்ளனர்.
காவல்துறையினரின் கட்டளை
காவல்துறையினரின் கட்டளையை மீறி டிப்பர் பயணித்த நிலையில் டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் இன்னொருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி