தமிழர் பகுதியில் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட குண்டுகள்
By Thulsi
10 months ago
ஆனையிறவு (Elephant Pass) உப்பளம் அமைந்துள்ள பகுதியில் வெடிக்காத நிலையில் RPG குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி (Kilinochchi) - ஆனையிறவு பகுதியில் பல வருடங்களுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் குறித்த பகுதியில் RPG 4 குண்டுகள் காணப்படுவது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றின் அனுமதி
இதனை அடுத்து அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நாளை நீதிமன்றின் அனுமதியுடன் குண்டுகளை பாதுகாப்பாக அகற்றி செயலிழக்கச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழர்தாயக பகுதிகளில் யுத்தத்தின் போது வீசப்பட்ட ஏறிகணைகள் வெடிக்காத நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீட்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி