இவர்களை தெரியுமா..! யாழ் மக்களிடம் உதவி கோரும் காவல்துறை
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையோரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளிக்காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
உதவி கோரும் காவல்துறை

இந்தக் காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதி காவல்துறைமா அதிபரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண மூத்த பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்திற்கோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் காவல்துறையினருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.