கிளிநொச்சியில் காவல்துறையினரின் அதிரடி வீதிச்சோதனை : வாகனங்கள் பறிமுதல்
கிளிநொச்சியில் போக்குவரத்து காவல்துறையினரால் விசேட அதிரடி வீதிச் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில், அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை இடம்பெற்றது.
ஜூன் மாதத்தில் மட்டும் நேற்றும் (27) இன்றும் (28) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட சுமார் 30க்கும் அதிகமான அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினரால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
இலக்கத் தகடுகள் இன்மை, வீதியில் செல்லும் பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் முறையான சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி செலுத்துதல், சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விதிகளுக்கு முரணாகவும் செயற்படும் வாகன சாரதிகளுக்கு எதிராக இனிவரும் நாட்களிலும் இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கிளிநொச்சி போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட சுமார் 20க்கும் அதிகமான டிப்பர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்