கொழும்பில் காணாமற் போன சிறுவன் -பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை
நீர்கொழும்பு, கொச்சிக்கடை - ஒப்பேரிய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் காணாமற் போன நிலையில் அவனைக் கண்டு பிடிப்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மெரின் ஷ்டெபான் என்ற பெயரையுடைய 14 வயதான சிறுவனே காணாமற் போனவனாவான்.
குறித்த சிறுவன் கடந்த மாதம் 22ஆம் திகதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள தேவாலயத்துக்கு நிகழ்வொன்றுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது.
5 அடி உயரம் கொண்டசிறுவன் காணாமல்போன சந்தர்ப்பத்தில் பச்சை நிற டீ - சேர்ட் மற்றும் நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் வெள்ளை மற்றும் கருப்பு காலணிகளை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சற்று மனவளர்ச்சி சிக்கலை கொண்டவர் என்று அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுவன் தொடர்பில் தகவல்கள் தெரிந்திருப்பின் 071 85 91 631 என்ற கொச்சிக்கடை காவல்நிலைய பொறுப்பதிகாரியின் இலக்கத்துக்கோ, 031 22 77 222 அல்லது 031 22 76 338 ஆகிய இலக்கங்களை தொடர்புகொண்டு கொச்சிக்கடை காவல்நிலையத்திற்கோ தகவல் வழங்குமாறு பொது மக்களிடம் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
