ஆபத்தான நபர்கள் -பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Sumithiran
போதைப்பொருள் வர்த்தகம்
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
400 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சந்தேகநபர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மூவர் அடையாளம் காணல்
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, போதைப்பொருள் விநியோகம் மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் முறையே 33, 27 மற்றும் 33 வயதுடையவர்கள்.
சந்தேக நபர்களின் நடமாட்டம் தொடர்பில் பொதுமக்கள் 071-8592727 / 011-2343333/4 / 071 – 8591881 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
