கொடூர கொலை: சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
மத்துகம காவல் பிரிவின் டோலஹேன பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றத்தில் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
2025.04.18 அன்று, மத்துகம காவல் பிரிவின் டோலஹேன பகுதியில் 34 வயதுடைய பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் வெட்டி கொல்லப்பட்டார்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்
இந்தக் குற்றம் தொடர்பான உண்மைகள் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேக நபர் பற்றிய விவரங்கள் பெயர் - பிராமணகே டொன் சனத் ரவீந்திர நிலந்த முகவரி - எண்.78/01, இஹலகந்த, அகலவத்த அடையாள அட்டை இல.:- 840321401V
சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது. தொலைபேசி எண்கள் - தலைமையக காவல்துறை பரிசோதகர் - மத்துகம 071 - 8591701 சிஐடி - மத்துகம 071-8594381
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |