காவல்துறையினரிடம் எல்லை மீறிய சந்தேகநபர்களுக்கு நேர்ந்த கதி
மினுவங்கொட பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, இன்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன், அதன்போது மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், வெல்ஹென காவல் நிலைய வீதித்தடையில் ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்த உத்தரவிட்டுள்ளனர், எனினும் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் தொடர்ந்து பயணித்ததையடுத்து இரண்டு அதிகாரிகள் துரத்தி சென்று நிறுத்தியுள்ளனர்.
போதைப்பொருள்
இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகநபர்களான இளைஞர்கள் காவல்துறை அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் உடன் செயற்பட்ட காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், அதில் ஒரு இளைஞன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
சம்பவத்தில் மினுவங்கொடை ராஜசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய லஹிரு டிலந்த என்ற இளைஞன் காயமடைந்துள்ளதுடன், உனபந்துரவத்த பகுதியைச் சேர்ந்த 21 வயதான தரிந்து ஹேஷான் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்கள் வசமிருந்த ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
